மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?
மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது. பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டுகள் செயலிழக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தனர். பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க பல வழிகள் இருக்கிறது. தற்போது SMS மூலம் பான் எண்ணை, ஆதாருடன் இணைக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். SMS மூலம் ஆதார் பான் இணைப்பு முதலில் உங்கல் போனில் UIDPAN என்ற டைப் செய்துவிட்டு, 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். இதன்பின், 567678/ 56161 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பவேண்டும். இப்போது உங்களுக்கு, ஆதார் எண் ஐடி தரத்தில் இருந்து இணைப்பின் நிலை பற்றி குறுஞ்செய்தி வரும்.