Page Loader
பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்
பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்

பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்

எழுதியவர் Nivetha P
Mar 25, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் தங்கியிருந்த 58 வயதாகும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று பதிவு செய்துள்ளார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது