Page Loader
லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல்
பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு

லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2023
04:39 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ, லண்டன் நகரம் அருகே இருக்கும் லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று சுயநினைவின்றி காணப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன. உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பம்பாய் ஜெயஸ்ரீக்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் உடனடியாக மூளையில் கீஹோல் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு முதல், அதீத கழுத்து வலியால் ஜெயஸ்ரீ அவதிப்பட்டதாகவும், இன்று காலையும், மதியமும், அவர் உணவருந்த வரவேயில்லை எனவும், சந்தேகத்தின் பேரில் அவரின் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் மயக்கத்தில் இருந்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஜெயஸ்ரீயை, விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பம்பாய் ஜெயஸ்ரீக்கு உடல்நிலை பாதிப்பு