ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்!
அதானி நிறுவனத்தை ஒரே அடியாக சரித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் ஒரு பெரிய நிறுவனம் குறித்து வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் பிளாக் இன்க் நிறுவனம் தான் அது. இந்த நிறுவனம் மொபைல் வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனமானது, ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜாக் டார்சியால் தொடங்கப்பட்டதாகும். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது மோசடி குற்றச்சாட்டை ஹிண்டன் பர்க் வெளியிட்டுள்ளது.
526 மில்லியன் டாலரை இழந்த ஜாக் டோர்சி - ஹிண்டன்பர்க் அறிக்கை என்ன?
ஹிண்டன்பர்க்கின் கடந்த 2 வருட நிதியியல் முடிவுகள் முதல் பல்வேறு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் செய்த ஆய்வுகளின் படி இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையால் ஜாக் டார்சியின் சொத்து மதிப்பு 526 மில்லியன் டாலருக்கு மேல் சரிந்துள்ளது. சட்டவிரோதமாக வருவாய் ஈட்டுவதாகவும், புள்ளி விவரத்தை வைத்து ஏமாற்றியுள்ளதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சரியான நேரத்தின்போது வெளியானதால் Block Inc நிறுவனத்தின் பங்குகள் 23% சரிந்துள்ளது. தற்போது வெறும் 4.4 பில்லியன் டாலர் உடன் மட்டுமே உள்ளார். ஒரே நாளில் 11% சொத்து மதிப்பை ஜாக் டோர்சி இழந்து இருக்கிறார்.