Page Loader
செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும்
சமீப காலங்களில் செல்வத்தை இழந்த பில்லியனர்கள்

செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும்

எழுதியவர் Siranjeevi
Feb 22, 2023
11:52 am

செய்தி முன்னோட்டம்

பணக்காரர்கள் ஒரே ஆண்டில பல மில்லியன் டாலர்களை இழந்து வீழ்ச்சியைக்கண்டுள்ளனர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நவம்பர் 2021 இல் எலான் மஸ்க்கின் நிகரமதிப்பு $340 பில்லியன் ஆகும். ஆனால், அதன்பிறகு அவர் சரிவை சந்தித்தார். ஆனால், சமீபத்தில் ஒரு ஆண்டில் $100 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்பை இழந்து, மஸ்க் முதல் நபராகவும் உள்ளார். அமேசான் நிறுவவனர் ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 9.8 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அமேசான் நிறுவன பங்குகள் வீழ்ச்சி கண்டதால் ஒரே நாளில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். இருந்தாலும், அதிர்ஷ்டம் 2022 இல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் ஒருமுறை $140 பில்லியன் மதிப்புடையவர்.

பணக்கார பட்டியல்

சமீப காலங்களில் செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - ஏன்?

2022 இல், அவர் $ 34.6 பில்லியன் மட்டுமே இருந்தார். ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு 2022ல் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. 2022ம் ஆண்டில் சில பணக்காரர்களுக்கு வீழ்ச்சியான ஆண்டாக இருந்தாலும் கெளதம் அதானியின் பங்குகள் மட்டும் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டில் அவரின் நிகர மதிப்பு $49.3 பில்லியன் அதிகரித்து, அவருக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், 2023ம் ஆண்டில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சிக்கிய அதானி, பல பில்லியனர்களை இழக்க நேரிட்டார். 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த இவர், தற்போது உலக பணக்கார பட்டியல்களில் 27வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். இதனால், அவரது சொத்து மதிப்பு வெறும் 46 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.