அடுத்த செய்திக் கட்டுரை

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு!
எழுதியவர்
Siranjeevi
Mar 25, 2023
04:45 pm
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
இந்த காதல் தம்பதிகளுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வது ஆக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது .
மார்க், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை, கடந்த புத்தாண்டில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், மூன்றாவது குழந்தை ஆரேலியாவை சமூக வலைத்தள பக்கம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், "Aurelia Chan Zuckerberg உன்னை உலகிற்கு வரவேற்கிறேன். நீ எங்களுக்கு வரம்" என கூறியுள்ளார்.
இத்தோடு குழந்தையை காண்பது போல் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
2003-ஆம் ஆண்டு முதல் பிரிசில்லாவுடன் காதலில் இருந்த மார்க், 2012-ஆம் ஆண்டு, அவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
செய்தி இத்துடன் முடிவடைந்தது