குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு!
சமூக வலைத்தளமான பேஸ்புக்(மெட்டா) மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல் கடத்தல், குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும், மார்க் ஜூக்கர் பெர்க், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க் நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் மீது இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். அதில் மெட்டாவின் தலைமை நிர்வாகம் குற்றச் செயல்களின் ஆதாரங்களில், கண்மூடித்தனமாக இருந்து நிறுவனத்தின் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர். மேலும், பிரச்சினைகளை எப்படி சரிசெய்வது என வாரியம் செய்ய தவறியதால் இந்த குற்றங்கள் நடக்கிறது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனர் மார்ஜ் ஜூக்கர்பெர்க் மீது பாலியல் குற்றச்சாட்டு
ஆனால், டெலாவேர் சான்செரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நோக்கத்தை மெட்டா நிறுவனம் நிராகரித்தது. இதுகுறித்து மெட்டா தெரிவிக்கையில், குழந்தை பாலியல் குற்றம் மனித சுரண்டல் போன்ற குற்றத்தை நாங்கள் தடை செய்கிறோம். இதுபோன்ற குற்றங்களை எங்கள் தளத்தில் செயல்படுவதை தடுப்பதே எங்களது குறிக்கோள் எனக் கூறியுள்ளனர். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிக்கும் போது, குழந்தை பாலியல் குற்றத்தை தடுக்க நாங்கள் கவனம் செலுத்துவது மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என தெரிவித்து இருந்தார்.