
மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண வெரிஃபைடு சேவையில் இறங்கி தற்போது வழங்க தொடங்கியுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிலும் இதே போன்ற கட்டண முறை அமலில் இருந்துவருகிறது.
மேலும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது.
புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும்.
மேலும், மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது.
மெட்டா நிறுவனம்
மெட்டா வெரிஃபைடு சேவை இன்று முதல் தொடக்கம் - எங்கு தெரியுமா?
இதற்கு கட்டணமாக web- வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் IOS மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன.
எனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது.