
நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'பத்து தல' படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று(மார்ச்.,25) இப்படத்தின் முன்பதிவுகள் துவங்கி விட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவடி' என்னும் வீடியோ பாடல் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தினை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் ட்விட்டர் பக்கத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் மிக வைரலாக அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு
#Raawadi is here for you ❤️#Sayyeshaa #GauthamKarthik's #RaawadiVideoSong from #PathuThala will make you groove 🥁
— Studio Green (@StudioGreen2) March 25, 2023
Full song visual link: 💃https://t.co/M71DFc0zr4
An @arrahman Musical
🎤 @SingerNivas @shubamusic
✍️ @KavingarSnekan@StudioGreen2 @PenMovies #Atman