திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலுமொரு தற்கொலை நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பை சேர்ந்தவர் ரவி ஷங்கர்.
துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையின் ஊழியராக பணியாற்றிவந்துள்ளார்.
இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துவந்துள்ளார்.
இதில் ஏகப்பட்ட பணத்தினை இழந்த அவர், அதனை ஈடு செய்ய கடன்வாங்கி ரம்மி விளையாடியுள்ளார்.
தொடர்ந்து அந்த கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவித்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர்.. தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை #trichy #crime #onlinerummy #திருச்சி #கிரைம் #ஆன்லைன்ரம்மி https://t.co/OmmOlEIJOp
— Oneindia Tamil (@thatsTamil) March 25, 2023