பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றம் கண்டும் வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகி வருகிறது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், பயனாளர்களுக்கு 12 சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, அந்த சிலிண்டருக்கு மானியமும் வழங்கப்பட்டுவந்தது.
தற்போது சிலிண்டர் விலை உயர்ந்ததனால், மானிய விலையையும் ரூ.200 அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் மட்டுமே, 35 லட்சம் பேர் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணையின் விலையின் ஏற்றஇறக்கத்திற்கு ஏற்ப, நம் நாட்டிலும் சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க.
ட்விட்டர் அஞ்சல்
கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 மானியம் அதிகரித்த மத்திய அரசு
₹200 subsidy to Ujjwala Yojana beneficiaries extended for another year benefiting 9.6 crore women. pic.twitter.com/FtP7OzB2TM
— Piyush Goyal (@PiyushGoyal) March 24, 2023