
பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது?
செய்தி முன்னோட்டம்
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 220 எஃப் பைக்கை மீண்டும் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கிற்கு இணையாக TVS நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4V இருப்பதால் இரண்டில் சிறந்த பைக் எது என்பதை பற்றி பார்ப்போம்.
பஜாஜ் பல்சர் 220F vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200
பஜாஜ் பல்சர் ஆனது, 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் OBD-2 விதிகள் பொருந்தக்கூடிய இன்ஜின் உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சியிலும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் துல்லியமான பவர் இன்ஜினை வழங்குகிறது.
இந்த இரண்டு பைக்கிற்குமே 17இன்ச் பிளாக் அவுட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பைக் நிறுவனங்கள்
Bajaj Pulsar 220F or TVS Apache RTR 200 - சிறந்த பைக் இதுவா?
அடுத்து இரண்டு பைக்கிலும் ரைடரின் பாதுகாப்பிற்காக சிறந்த பிரேக்கிங் செயல்திறனுக்காக இரண்டு ABS கொடுக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சரில், 220cc, DTS-i மற்றும் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவே, டிவிஎஸ் அப்பாச்சியில் 197.75cc மற்றும் சிங்கிள் சிலிண்டர், 4-வால்வு காற்று மற்றும் எண்ணெய் குளிர்விக்கப்பட என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
எதை வாங்கலாம்?
இந்தியாவில் பஜாஜ் பல்சர் 220எஃப் ஆனது, ரூ. 1.37 லட்சம் விலையில் கிடைக்கிறது.
TVS Apache RTR 200 4V பைக் ஆனது, ரூ. 1.45 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதன்படி பார்த்தால் அப்பாச்சி சிறந்த தேர்வாக தான் இருக்கிறது.