
ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, தங்களின் முக்கியமான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் உடற்தகுதி குறித்த கவலையில் உள்ளது.
மேக்ஸ்வெல் தனது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் போட்டித் தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை.
முழு உடற்தகுதியை மீண்டும் பெற சில மாதங்கள் ஆகலாம் என அவர் கூறியிருந்தார்.
இதனால் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எனினும் ஆர்சிபியின் வெற்றிக்கு பங்களிப்பதில் உறுதியாக உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவை ஆர்சிபி பகிர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆர்சிபி ட்வீட்
Maxi is ready to take off at the Chinnaswamy! Here’s what he had to say about playing in front of our home crowd, andhisfitness.#PlayBold #ನಮ್ಮRCB#IPL2023 @Gmaxi_32 pic.twitter.com/9poXw6F8Sp
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 25, 2023