NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?!
    பகாசுரன் இன்று ஓடிடியில் வெளியாகிறது

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?!

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2023
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம் வெள்ளித்திரைக்கு படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன எனப்பார்ப்போமா?

    பகாசுரன்: இயக்குனர் செல்வராகவன் நடிப்பில், மோகன் ஜி எழுதி இயக்கியுள்ளார். தனது முந்தைய படங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன், இந்த படத்தில் ஆன்லைன் விபச்சாரம் மற்றும் பெண்கள் சுரண்டப்படும் பல வழிகளை பற்றி பேசினார். இதில், செல்வராகவன் உடன் இணைந்து 'நட்டி' நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

    சென்ற பிப்ரவரி 17, 2023 அன்று, இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டு, அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவும் சமீபத்தில் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து, இந்த படம், இன்று மார்ச் 24, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

    ஓடிடி

    அகிலன், அயோத்தி திரைப்படங்கள்

    இந்த மாத துவக்கத்தில், வெளியான அயோத்தி மற்றும் அகிலன் திரைப்படங்கள், பரவலான வரவேற்பைப் பெற்றது.

    ஜெயம் ரவி நடிப்பில், கடல் வணிகம் தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

    இந்த படத்தில், பிரியா பவானிஷங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

    'அயோத்தி' படத்திற்கு பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. காரணம், அதன் பட்ஜெட் தட்டுப்பாடு. எனினும், படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.

    இந்த இரு படங்களும், இம்மாத இறுதியில், மார்ச் 31 அன்று ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.

    இவற்றோடு, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த 'பதான்' திரைப்படமும் இந்த வாரம் பிரைம் வீடியோவில் வெளிவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    ஓடிடி

    3 மணி நேரம் தான் - 2000-டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது ரஜினிகாந்த்
    டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது சமந்தா ரூத் பிரபு
    பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை இந்தியா
    இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள் சோனிலைவ்

    தமிழ் திரைப்படங்கள்

    உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல் தமிழ் பாடல்கள்
    ஆதியின் புதிய படம்; 13 வருடத்திற்கு பிறகு இணையும் 'ஈரம்' பட கூட்டணி தமிழ் திரைப்படம்
    ஜப்பானில் முத்து படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் புதிய சாதனை செய்த 'RRR' தமிழ் திரைப்படம்
    2022 ஆம் ஆண்டில் IMDb -ல் இடம் பெற்றுள்ள டாப் 10 வெப் சீரிஸ் வெப் சீரிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025