Page Loader
எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்
வரும் மார்ச் 17-ந் தேதி 'கண்ணை நம்பாதே' படம் வெளியாக போகிறது

எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம், கிட்டத்தட்ட 5 படங்கள் ரசிகர்களுக்காக வெளிவர போகிறது. அதில் 3 படங்கள் வெள்ளித்திரையில் வெளிவரும் நேரத்தில், மற்ற 2 படங்கள், OTT தளத்தில் வெளிவர போகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். கண்ணை நம்பாதே: 'மாமன்னன்' படத்திற்கு முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், கண்ணை நம்பாதே. இந்த படத்தில், ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், பிரசன்ன, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். மு.மாறன் இயக்கியுள்ள இந்த படம், வரும், மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கப்சா: உபேந்திரா நடிப்பில் வெளிவரவிருக்கும் கன்னட மொழி படமான இந்த திரைப்படம், பான் இந்தியன் படமாக வெளிவரவிருக்கிறது.

தமிழ் திரைப்படம்

வரும் மார்ச் 17 ஓடிடி தளத்தில் வெளியாகும் வாத்தி திரைப்படம்

கோஸ்டி: பெயருக்கு ஏற்றார் போல், பேய் படமாக உருவாகி இருக்கும், இந்த திரைப்படத்தில், காஜல் அகர்வால் கதையின் லீட் ரோலில் நடித்துள்ளார். இவருடன், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளார். இந்த படம், மார்ச் 17-ந் தேதி வெளியாகவுள்ளது. வாத்தி: தனுஷ் நடிப்பில், சென்ற மாதம் வெளியான இந்த திரைப்படம், இந்த வாரம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தில், சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். கல்விதுறையில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்கும் ஆசிரியரை பற்றிய கதை தான் வாத்தி. சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்: இந்த படம் பிரபல OTT தளங்களில் தற்போது வெளியாகவில்லை. மாறாக, மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.