NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம், திரையரங்குகள் & OTT தளங்களில் வெளியாகும் படங்கள்
    பொழுதுபோக்கு

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம், திரையரங்குகள் & OTT தளங்களில் வெளியாகும் படங்கள்

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம், திரையரங்குகள் & OTT தளங்களில் வெளியாகும் படங்கள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 09, 2023, 11:19 am 1 நிமிட வாசிப்பு
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம், திரையரங்குகள் & OTT தளங்களில் வெளியாகும் படங்கள்
    இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்

    இந்த வாரம் 3 படங்கள் திரையரங்குகளிலும், 3 படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது. அந்த படங்களின் பட்டியலை இங்கு காண்போம். கொன்றால் பாவம்: வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஒரு அழகான குடும்பம் வசித்து வரும் வீட்டில், ஓர் இரவு வந்து தங்கும் மர்ம நபரால் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் முடிவுகளும் தான் கதைக்களம். தயாள் பத்மநாபன் இயக்கும் இந்த திரில்லர் திரைப்படம், நாளை, மார்ச் 10 வெளியாகிறது. அகிலன்: இந்த படத்தில், ஜெயம் ரவியுடன், பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் நாளை வெளியாகிறது.

    இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகப்போகும் படங்கள்

    டாடா: கவின் நடிப்பில் வெளியாகி, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'டாடா', இந்த வாரம், அமேசான் பிரைம்மில் வெளியாகவிருக்கிறது. ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில், முதல்முறை இயக்குனரான கணேஷ் K .பாபு இயக்கத்தில் அபர்ணா தாஸ் மற்றும் பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். ரன் பேபி ரன்: பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்ற, 'ரன் பேபி ரன்' நாளை, மார்ச் 10 அன்று, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது. இந்த படத்தில், ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பொம்மை நாயகி: யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில், ப.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம், நாளை முதல் zee 5-வில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஓடிடி
    தமிழ் திரைப்படங்கள்

    ஓடிடி

    ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம் நெட்ஃபிலிக்ஸ்
    OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது திரையரங்குகள்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் திரைப்பட வெளியீடு
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் விஜய்

    தமிழ் திரைப்படங்கள்

    நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும்-3 தமிழ் திரைப்படம்
    நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 2 தமிழ் திரைப்படம்
    'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை தமிழ் திரைப்படம்
    நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 1 தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023