OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது
கோவிட் காலத்திற்கு பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் கண்டுகளிப்பதால், OTT இயங்குதளங்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன. ஆனால் தற்போது OTT வெளியீடுகளுக்கு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு கட்டுப்பாடு உள்ளது. 'மைகேல்' திரைப்படம், திரையரங்கில் வெளியாகி 4 வாரங்களுக்கு முன்னதாகவே OTT தளத்தில் வெளியிடப்பட்டதால் இந்த புதிய விதியை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, திரையரங்கு வெளியீடுகள் அனைத்தும், அவற்றின் திரையரங்கு வெளியீட்டு தேதிக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் வெளியிட அனுமதிக்கப்பட்டன. ஆனால், இனிமேல் படத்தை திரையரங்குகளில் வெளியான 6 வாரங்களுக்கு பிறகு தான் OTT தளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறியுளளது.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய விதி
மைக்கேல் படத்திற்கு தடை
அதற்கு முன்னதாகவே எந்த OTT தளத்திற்கு விற்கப்படுகிறது என்பதை தயாரிப்பாளர்கள் அறிவிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த விதி எப்போதிருந்து அமலுக்கு வருகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை . கூடுதலாக இந்த விதியை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான 'மைகேல்' திரைப்படம் நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், OTT தளத்தில் அதை வெளியிட்டது அந்த படத்தின் தயாரிப்பு குழு. இது திரையரங்குகளில் அந்த திரைப்படத்தை காண வரும் கூட்டத்தை பாதித்தது எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து, 'மைகேல்' திரைப்படம் எந்த திரையரங்குளிலும் திரையிடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.