Page Loader
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்
இந்த வாரம் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான தலைக்கூத்தல் படம் OTTயில் காணலாம்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2023
03:00 pm

செய்தி முன்னோட்டம்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, OTT தளத்திற்கு இந்த வாரம் வரவுள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். தலைக்கூத்தல்: சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'தலைக்கூத்தல்' பரவலாக நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த வாரம், மார்ச் 3, 2023 அன்று Netflix இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், பிப்ரவரி 3, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. சமுத்திரக்கனி, கதிர் மற்றும் வசுந்தரா நடித்த இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் வயது முதிர்ந்தவர்களை கருணை கொலை செய்யும் நடைமுறையை பற்றி பேசுகிறது. இந்த படத்தை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். டாடா: கவின் நடிப்பில் வெளியாகி, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'டாடா', இந்த வாரம், அமேசான் பிரைம்மில் வெளியாகவிருக்கிறது.

ஓடிடி

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ரன் பேபி ரன்

பிப்ரவரி 10, திரையரங்குகளில் வெளியான 'டாடா' படம், பலராலும் பாராட்டப்பட்டது. ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில், முதல்முறை இயக்குனரான கணேஷ் K .பாபு இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ் மற்றும் பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். ரன் பேபி ரன்: பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும், 'ரன் பேபி ரன்' பல தொடர் வெளியீடுகளில், திரையரங்குகளில் குறைவான காட்சிகளே வெளியாயின என்ற கருத்து நிலவி வந்த வேளையில், இந்த திரில்லர் படத்தை OTT தளத்தில் வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். RJ பாலாஜி நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் மார்ச் 10 அன்று, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது.