Page Loader
வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.

வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை

எழுதியவர் Sindhuja SM
Mar 24, 2023
02:41 pm

செய்தி முன்னோட்டம்

மார்ச் 24ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 25ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது மார்ச் 26-28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்