
கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(BSF) எல்லையில் பணிபுரியும் போது கடுமையான குளிரையும் காற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.
கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் என்று பாராமல் அனைத்து சவால்களையும் அவர்கள் இந்திய எல்லைகளைப் பாதுகாக்க செய்து வருகின்றனர்.
அ வர்களை பாராட்டும் விதமாக , BSF காஷ்மீர் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் கடுமையான பனி மற்றும் காற்றில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் காட்டப்பட்டுள்ளார்.
"வெற்றி சவால்கள் நிறைந்தது. ஆனால் அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. காஷ்மீர் எல்லை. எல்லைப் பாதுகாப்புப் படை" என்று அந்த பதிவில் BSF காஷ்மீர் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் BSF வீரரின் வீடியோ
जीत का समंदर चुनौतियों भरा है ,
— BSF Kashmir (@BSF_Kashmir) March 23, 2023
पर मेरे अंदर भी उस जीत को पाने का एक ज़ज्बा भरा है।
कश्मीर सीमान्त ।
सीमा सुरक्षा बल - सर्वदा सतर्क l#LoC #BSF pic.twitter.com/O0WKBSfEcm