
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
காலிஸ்தான் பிரினைவாதிகளை எதிர்க்கும் விதமாக அவர்கள், 'வந்தே மாதரம்' போன்ற இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்தனர்.
இந்த பேரணியில் சில காலிஸ்தான் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைதி பேரணியின் போது வன்முறை சம்பவங்கள் ஏதும் நடந்துவிடமால் இருப்பதை சான் பிரான்சிஸ்கோ போலீஸார் உறுதி செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் வன்முறை போராட்டத்தை நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது, தூதரக கட்டிடம் சேதப்படுத்தப்பட்டு, காலிஸ்தான் கொடிகள் நிறுவப்பட்டன.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய-அமெரிக்கர்கள் நடத்திய அமைதி பேரணியின் வீடியோ
#WATCH | United States: Indians gather outside the Indian consulate in San Francisco in support of India's unity pic.twitter.com/tuLxMBV3q0
— ANI (@ANI) March 25, 2023