வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வீடியோ கால் வசதி! புதிய அம்சங்கள் என்ன?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திக்கொண்டே சென்றாலும், பலரும் இன்டர்நெட் உபயோகப்படுத்தி தான் கால், வீடியோ, சாட் போன்றவற்றை செய்துவருகின்றனர். அதில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ்அப் தான். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கிலும் தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், வாட்ஸ்அப் விண்டோஸிற்கான புதிய டெஸ்க்டாப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிக்கையில், டெஸ்க்டாப்பிலும் வீடியோ கால் செய்யும் வசதியை விரைவில் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் என்னென்ன வசதிகள் அறிமுகம்
அதன்படி, டெஸ்க்டாப் மூலம் அழைக்கும் வீடியோ காலில் 8 பேர் வரையும், ஆடியோ காலில் 32 பேர் வரை பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவை காலப்போக்கில் தொடர்ந்து அதிகரிக்கப்போவதாகவும், இதன் மூலம் நீங்கள் எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் இணைவதற்கான பல அப்டேட்களையும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.