வாட்ஸ்அப் குழுவில் அசத்தலான அம்சங்கள் வெளியீடு! என்னென்ன?
வாட்ஸ்அப் செயலியானது உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் அவ்வப்போது பயனர்கள் வசதிக்கேற்ப புதிய அம்சத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப் குரூப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, குரூப்பில் புதிய நபர்கள் இணைவதை அனுமதிப்பது, மற்றும் பயனர்கள் பொதுவாக இருக்கும் குரூப் பக்கங்களை காண்பது என புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒரு நம்பர் அல்லது பெயரை எளிமையாக தேர்வு செய்து இருவருக்கும் பொதுவான குரூப்களையும் கண்டறியமுடியும். இந்த கூடுதல் வசதியை மெட்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் குழுவில் முக்கிய அப்டேட்கள் வெளியீடு - என்னென்ன?
அவர் கூறுகையில், இனி வரும் வாரங்களில் உலகெங்கிலும் இந்த வசதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். அண்மையில் தான் வாட்ஸ் அப் நிறுவனம் குழுவில் அதிகமாக இணையக்கூடிய அப்டேட்டை வெளியிட்டு இருந்தது. மேலும், வாட்ஸ் அப்பில் உங்கள் நண்பருக்கு அனுப்பிய 2 அல்லது 3 மாதங்களுக்கு முன் அனுப்பிய சாட்டையும் தேதியை குறிப்பிட்டு படிக்கலாம். தொடர்ந்து, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சேவையையும் இன்று முதல் அளிப்பதாக மெட்டா தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இச்சேவையில் 8 நபர்களுடன் குழு வீடியோ கால்களையும், 32 பேர் வரை ஆடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். இந்த வரம்புகளை காலப்போக்கில் தொடர்ந்து அதிகரிப்போம் எனத்தெரிவித்துள்ளது.