NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
    இந்தியா

    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு

    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2023, 02:36 pm 1 நிமிட வாசிப்பு
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
    இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, ஏஜென்சிகள் சுதந்திரமாக செயல்படுவதாக கூறியுள்ளது.

    மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. மத்திய புலனாய்வு அமைப்பு(CBI), அமலாக்க இயக்குநரகம்(ED) போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாஜகவில் இணைந்தவுடன் தலைவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, ஏஜென்சிகள் சுதந்திரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியின் மனுவை ஏற்றுக்கொண்டு, அதை இரண்டு வாரங்களில் விசாரிப்பதற்காக விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளனர்.

    கைது செய்வதற்கான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்: எதிர்க்கட்சிகள்

    கைதுக்கு முந்தைய மற்றும் கைதுக்கு பிந்தைய வழிகாட்டுதல்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் பின்பற்ற வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. "95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்களையும், கைதுக்குப் பிந்தைய வழிகாட்டுதல்களையும் நாங்கள் கோருகிறோம்," என்று சிங்வி கூறியுள்ளார். திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசிய மாநாடு, தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பாஜக
    மத்திய அரசு
    காங்கிரஸ்

    இந்தியா

    NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்! வங்கிக் கணக்கு
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா உலக வங்கி

    பாஜக

    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் தமிழ்நாடு
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி இந்தியா
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு இந்தியா

    மத்திய அரசு

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை உச்ச நீதிமன்றம்
    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் ஆதார் புதுப்பிப்பு

    காங்கிரஸ்

    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து இந்தியா
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023