Page Loader
மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி
'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதியின் தன்னலமற்ற செயல்

மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2023
01:45 pm

செய்தி முன்னோட்டம்

முதுமலையில் இருக்கும் யானை முகாமை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் தான் 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்'. சமீபத்திய ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதினை இந்த படம் வென்றுள்ளது. தாயை இழந்து தவிக்கும் இரண்டு குட்டி யானைகளுக்கு, பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட பொம்மன், பெள்ளி தம்பதியரின் கதையே, இந்த குறும்படம். இந்தத் தம்பதிகளுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழக முதலவர் இவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலைகளை பரிசாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தம்பதிகள், தருமபுரி மாவட்டத்தில், தனித்து விடப்பட்ட யானை குட்டியை தத்தெடுத்து உள்ளதாக, IAS அதிகாரி சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இந்த தம்பதிகளின் தன்னலமற்ற செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி