ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலிருந்து சென்று, இந்த ஆண்டின் சிறந்த ஆவண குறும்படத்திற்க்கான ஆஸ்கார் விருதை வென்றது 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம். இந்த படத்தின் இயக்குனர், கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று, இயக்குனர் கார்திகி-ஐ நேரில் அழைத்து தனது பாராட்டையும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சரும், துறை சார்ந்த IAS அதிகாரிகளும், தலைமைசெயலரும் உடன் இருந்தனர்.
சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின், படத்தின் நாயகர்களான, பொம்மன் மற்றும் பெல்லியை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
அமெரிக்காவில் விருது வாங்கிய பிறகு, சமீபத்தில் இந்தியா வந்த இயக்குனரை, உடனே அழைத்து கௌரவித்துள்ளார் முதல்வர்.
அதோடு, கார்த்திக்கு, 1 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
#WATCH | Tamil Nadu CM MK Stalin felicitates Oscar-winner The Elephant Whisperer's director, Kartiki Gonsalves, in Chennai pic.twitter.com/mNhmiixEbx
— ANI (@ANI) March 21, 2023