NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா
    பொழுதுபோக்கு

    ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா

    ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 17, 2023, 04:36 pm 1 நிமிட வாசிப்பு
    ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா
    ஆஸ்கார் விழா சர்ச்சை குறித்து மௌனம் கலைத்த குனீத் மோங்கா

    ஆஸ்கார் விழாவில், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' வெற்றி பெற்ற பிறகு, மேடையில் பேச அனுமதிக்கப்படாதது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா மனம் திறந்துள்ளார். விருது விழாவின் போது, சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான அகாடமி விருதை கையில் பிடித்தபடி குனீத், இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது உரையை முடிப்பதற்காக காத்திருந்தார். கார்த்திகி தனது உரையை முடித்தது, மைக் முன்னாள் பேச வந்தபோது, நேரம் முடிவடைந்தது என்பது போல தெரிவிக்கப்பட்டு, அவர் உரையாற்ற முடியாமல் போனது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலர் இது மேலைநாட்டு மக்களின் ஒடுக்கும் மனப்பான்மை என்பது போலக்கூட சாடினர். இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ளார் குனீத் மோங்கா.

    "இந்திய தயாரிப்பில் இந்தியாவின் முதல் ஆஸ்கார்"

    ஆஸ்கார் விருது வென்ற பிறகு, மும்பைக்கு திரும்பிய அவரிடம், விருது மேடையில் பேசமுடியாமல் போனது குறித்து பல ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு பதில் அளித்த அவர், "எனது ஆஸ்கார் விருது உரையை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் முகத்தில் ஒரு அதிர்ச்சி. இந்திய தயாரிப்பில் இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது இது என்று நான் சொல்ல விரும்பினேன். இவ்வளவு தூரம் வந்து, நான் இதை சொல்லாமல் இருக்கக்கூடாது என என் இதயம் படபடக்க ஆரம்பித்தது," என்று அவர் கூறினார். ஆஸ்கார் விருது வென்ற இந்த ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் மற்றும் பெல்லி இருவரையும் இரு தினங்களுக்கு முன்னர், தலைமைச்செயலகத்திற்கு அழைத்து கௌரவித்தார் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி
    ஆஸ்கார் விருது

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    வைரல் செய்தி

    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரலான ட்வீட்
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து ஏஆர் ரஹ்மான்
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    கீரவாணி ஆஸ்கார் வென்றதை அடுத்து ரசூல் பூக்குட்டியை ட்ரோல் செய்தவருக்கு 'நச்' பதில் தந்த ரசூல் வைரல் செய்தி

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023