
'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற, 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில், நடித்திருந்த, பொம்மன், பெள்ளி தம்பதியரை, இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
முதுமலையில் இருக்கும் யானை முகாமை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் தான் 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்'.
சமீபத்திய ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதினை இந்த படம் வென்றுள்ளது.
தாயை இழந்து தவிக்கும் இரண்டு குட்டி யானைகளுக்கு, பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட பொம்மன், பெள்ளி தம்பதியரின் கதையே, இந்த குறும்படம்.
இந்தத் தம்பதிகளுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழக முதலவர் இவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலைகளை பரிசாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பொம்மன், பெள்ளி தம்பதியரை பாராட்டிய முதல்வர்
Chennai | Tamil Nadu CM MK Stalin felicitates elephant caretaker couple Bomman Bellie following the #Oscars win for the documentary 'The Elephant Whisperes'.
— ANI (@ANI) March 15, 2023
The documentary is based on the life and work of Bomman and Bellie who foster elephant calves, Ammu and Raghu. pic.twitter.com/OneA8Z5Y4i