Page Loader
ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்
'The elephant Whisperers' படத்தின் கதாநாயகர்களான குட்டி யானையும், அவற்றின் பராமரிப்பாளர்களும்

ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2023
05:23 pm

செய்தி முன்னோட்டம்

'The Elephant Whisperers' என்ற ஆவணப்படம் இன்று ஆஸ்கார் விருதை வென்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளும், அவற்றை பராமரிக்கும் பாகனுக்கும் இடையிலான பந்தத்தை பற்றியது இந்த படம். பொம்மன், பெள்ளி என்ற தம்பதிகள் தான் இந்த யானை குட்டிகளை பராமரிக்கும் பணியினை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, காயம்பட்ட ஒரு அனைதையான ஆண் யானை குட்டியை, வைத்தியம் செய்து, முதுமலையில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு கொண்டு வரும் பணியினை பொம்மன் ஏற்றுக்கொண்டார். அந்த யானைக்கு ரகு என பெயரிட்டுள்ளனர். மறுபுறம், சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்து திருந்துக்கொண்டிருந்த பெண் யானை குட்டியை மீது, அதற்கு அம்மு என பெயரிட்டு வளர்த்தனர். இதுபற்றியெல்லாம் கேள்விப்பட்ட இந்த ஆவணப்படத்தின் இயக்குனர், இவர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளார்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

சிறு குழந்தைகளை போல பழகும் யானை குட்டிகள்

உடனே,இவர்களிடமும், வனத்துறையிடமும் முறைப்படி அனுமதி பெற்று, 2ஆண்டுகளாக இவர்களை படம் பிடித்தாராம். இரு குட்டிகளுக்கும், குளிக்க வெந்நீர், குடிக்க பால் புட்டியில் பால் என தங்களது சொந்த பிள்ளைகள் போல வளர்த்ததாக, அந்த பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்போது, அவை பசியடங்கியதும், தங்கள் அருகில் வந்து படுத்துக்கொள்ளுமாம். சிறு குழந்தைகளை போல, தூங்கும் போது மேலே கால் போடுவதும், தும்பிக்கையை போடுவதும் கூட நிகழ்வதுண்டு என அந்த பாகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படம் ஆஸ்கார் விருது வாங்கியதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளனர். மறுபுறம், இந்த படத்தில் இடம்பெற்ற யானை குட்டிகளை, போதை ஆசாமிகள் சிலர், காட்டுக்குள் விரட்டிவிட்டதாகவும், அவற்றை தேடி, பொம்மன் சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன