Page Loader
ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு  பிரதமர் மோடி வாழ்த்து
விருது வென்ற படக்குழுவினருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிலிருந்து, உலக அரங்கில் சென்று, ஆஸ்கார் விருதுகளை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவர்களுக்கு கிடைத்த பாராட்டுகளால், இந்தியா பெருமையடைந்ததாக கூறினார். மேலும், RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலின் வெற்றி விதிவிலக்கானது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். "விதிவிலக்கானது! 'நாட்டு நாட்டு' புகழ் உலகளாவியது. இது பல ஆண்டுகளாக நினைவில் வைக்கப்படும் பாடலாக இருக்கும். @mmkeeravaani, @boselyricist மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக இந்தியா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது" என பதிவிட்டிருந்தார் பிரதமர். மேலும், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குழுவினருக்கும், பிரதமர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மோடி வாழ்த்து

ட்விட்டர் அஞ்சல்

RRR படக்குழுவினருக்கு மோடி வாழ்த்து