ஆஸ்கார் விருதுகள் 2023: RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்றது
உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள். ஆஸ்கார் விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி, இன்று காலை 5:30 மணிக்கு துவங்கிய இந்த விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவிலிருந்து இம்முறை மூன்று திரைப்படங்கள் ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி இருந்தது. ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'ஆல் தட் பரீத்ஸ்' என்கிற குஜராத்தி மொழித்திரைப்படம், சிறந்த ஆவண படம் பிரிவிலும், 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்' என்கிற திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் போட்டியிட்டது.
ஆஸ்கார் விருதை வென்ற RRR
இந்திய திரைத்துரைக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இந்த ஆஸ்கார் விருதை வென்றுள்ளது RRR திரைப்படம். 'Slumdog Millionaire' படத்திற்கு பிறகு, ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு கொண்டு சேர்த்து பெருமைப்பட வைத்துள்ளது இந்த RRR திரைப்படம். 'Best Original Song ' என்ற பிரிவில் RRR திரைப்படம் விருதை வென்றது. இந்த விழாவிற்கு, படத்தின் இயக்குனர் ராஜமௌலியுடன், படத்தின் நாயகர்கள் Jr NTR, ராம்சரண் ஆகியோரும், இசையமைப்பாளர் கீரவாணியும் மற்ற படக்குழுவினரும் வந்திருந்தனர். சென்ற ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ஏற்கனவே உலகஅரங்கில் பல விருதுகளை குவித்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கார் விருது வாங்கியது, 'Slumdog Millionaire' படத்தின் இசைக்காக, 'இசைபுயல்' AR ரஹ்மானும், சிறந்த சவுண்ட் மிக்ஸிங்-காக ரசூல் பூக்குட்டியும் என்பது குறிப்பிடத்தக்கது.