Page Loader
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது பதக்கத்தை வென்ற த்ராங்க்ஷ் பாட்டீல்

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 24, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆடவர் 10மீ ஏர் ரைபிளில் வெண்கலம் வென்றார். இது தற்போது நடந்து வரும் போட்டியின் இரண்டாவது பதக்கமாகும். மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஒரு பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ருத்ராங்க்ஷ் பாட்டீலுக்கு இரண்டாவது பதக்கம்