ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு
ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் இசு தீவுகளை வெள்ளிக்கிழமை தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இசு தீவுகள் என்பது ஜப்பானின் இசு தீபகற்பத்தில் இருந்து தெற்கிலும் கிழக்கிலும் பரவியுள்ள எரிமலைத் தீவுகளின் குழுவாகும். நிலநடுக்கம் 00:06:45 (UTC 05:30) மணிக்கு ஏற்பட்டது என்றும் ஜப்பானின் இசு தீவுகளை 28.2 கிமீ ஆழத்தில் வெள்ளிக்கிழமை தாக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29.988°N மற்றும் 141.876°E என்ற பகுதிகளில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால், இதுவரை எந்த இழப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.