பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை
யூரோ 2024க்கான தகுதிச் சுற்றின் குழு பி பிரிவில் பிரான்ஸ் கால்பந்து அணி நெதர்லாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு தனது முதல் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் முதல் 21 நிமிடங்களில் 3-0 என முன்னிலை பெற்றது. பின்னர் 88வது நிமிடத்தில் எம்பாப்பே தனது அணியின் நான்காவது கோலை சேர்த்தார். இதன் மூலம் அணி வெற்றி பெற்றதோடு, தற்போது பிரான்ஸ் கால்பந்து அணியின் 5வது அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை எம்பாம்பே பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 36 கோள்கலுடன் கரீம் பென்சிமா ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது எம்பாம்பெ 37 கோல்களுடன் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பிரான்ஸ் அணியின் புதிய கேப்டனாக கைலியன் எம்பாம்பே நியமனம்
பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்ததில் எம்பாப்பே தற்போது ஆலிவர் ஜிரோட் (53), தியரி ஹென்றி (51), அன்டோயின் கிரீஸ்மேன் (43), மைக்கேல் பிளாட்டினி (41) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார். பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே அடித்த 38 கோல்களில் எட்டு கோல்கள் நட்பு ஆட்டங்களில் எடுக்கப்பட்டவை ஆகும். பிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அவர் ஆறு கோல்களை அடித்துள்ளார். மேலும் கத்தாரில் அடித்த 8 கோல்கள் உட்பட பிபா உலகக் கோப்பையில் 12 கோல்களை அடித்துள்ளார். கத்தார் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வி அடைந்த நிலையில், அணியின் கேப்டனாக இருந்த ஹ்யூகோ லோரிஸ் ஓய்வை அறிவித்ததை அடுத்து, கடந்த வாரம் புதிய கேப்டனாக எம்பாபே நியமிக்கப்பட்டார்.