
சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு
செய்தி முன்னோட்டம்
2023ம் ஆண்டின் ஜி20அமைப்புக்கு இந்தியா இம்முறை தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம்தேதிகளில் டெல்லியில் இந்த ஜி20 மாநாடானது நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 200 பல வித நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, சென்னையில் ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு தொடங்கவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டின்போது காலநிலை மாற்றம், உலகபொருளாதாரம், விலைவாசி உயர்வு, உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு
சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு..
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 24, 2023
80 பிரதிநிதிகள் பங்கேற்பு...#G20 https://t.co/Ez1RHE93ce