
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரதமர்! வைரலாகும் காணொளி!
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
ரிஷி சுனக் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் வீரர்களை சந்தித்ததோடு சாம் கர்ரன் மற்றும் கிரிஸ் ஜோர்டான் வீசிய பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.
இது தொடர்பான காணொளியை பிரதமரின் மூத்த வீடியோகிராஃபர் லூகா போஃபா ட்விட்டரில் வெளியிட்டார்.
இதற்கிடையே, இங்கிலாந்தின் ஒயிட் பால் கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அணியினருடன் வியாழக்கிழமை (மார்ச் 23) பிரதமரை சந்தித்தபோது அணியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட, அவர் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் காணொளி
Prime Minister @RishiSunak playing cricket with the #T20 World Cup winning cricket team at 10 Downing Street. pic.twitter.com/Bqh57dVZce
— Luca Boffa (@luca_boffa) March 22, 2023