
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 2014ஆம் ஆண்டில் 51,348 ஆக இருந்த MBBS இடங்கள் தற்போது 1,01,043 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா
இந்தியாவில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் வந்துள்ளன
2014 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான முதுகலை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது, நாட்டில் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இது 2014 இல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 2014ல் இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 31,185 ஆக இருந்தது.