மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ்
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார். சனிக்கிழமை (மார்ச் 25) நடைபெற்ற இறுதிப்போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ், மங்கோலியாவின் லுட்சைகானி அல்டான்செட்செக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். மேலும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வெல்லும் ஆறாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 22 வயதே ஆன நிது கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இதே எடைப் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.