NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை
    இந்தியா

    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை

    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை
    எழுதியவர் Sindhuja SM
    Mar 25, 2023, 06:20 pm 1 நிமிட வாசிப்பு
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை
    கொரோனா அதிகரித்து வரும் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிந்து, அதற்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்

    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்(UT) ஒரு நிலையான பரிசோதனை அளவை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(மார் 25) தெரிவித்துள்ளது. சாதாரண காய்ச்சலும் கொரோனாவும் ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருப்பதால், பருவகால இன்ஃப்ளூயன்ஸா எதற்காக அதிகரித்து வருகிறது என்பதற்கான காரணங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) துணை ஜெனரல் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்திருக்கிறார். சில மாநிலங்கள், கொரோனாவை சோதிக்க 'குறைந்த செயல்திறன் கொண்ட விரைவான ஆன்டிஜென்' சோதனைகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போதைய சோதனை எண்ணிக்கை போதுமானதாக இல்லை: டாக்டர் ராஜீவ்

    "சில மாநிலங்களில் கடந்த பல வாரங்களாக, கோவிட்-19 சோதனை குறைந்துள்ளது. WHO பரிந்துரைத்த தரங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய சோதனை எண்ணிக்கை போதுமானதாக இல்லை(1 மில்லியனுக்கு 140 சோதனைகள்). அதனால், மாநிலங்கள் எங்கிலும் சமமான கோவிட்-19 சோதனைகளை பராமரிப்பது மிகவும் முக்கியமானது." என்று டாக்டர் ராஜீவ் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும், கொரோனா அதிகரித்து வரும் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிந்து, அதற்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதார நிலையங்களின்(மருத்துவமனைகள்) தயார்நிலையை மதிப்பிடுவதற்காக இந்தியா முழுவதும் ஏப்ரல்-10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 'மாக் ட்ரில்' நடத்தப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 'மாக் ட்ரில்' பயிற்சிகளின் பிற விவரங்கள் மார்ச்-27அன்று மாநிலங்களுடன் நடைபெறும் ஆன்லைன் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    கொரோனா
    சுகாதாரத் துறை

    இந்தியா

    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு! மெட்டா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா

    சுகாதாரத் துறை

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் ஈரோடு
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை தமிழ்நாடு
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள் சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023