சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கலாஷேத்ரா கடந்த டிசம்பர் 2022ல் கலாஷேத்ரா முன்னாள் இயக்குனரும், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான லீலா சேம்சன், தன்னுடைய முகநூலில் கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த ஓர் பதிவினையிட்டு உடனே அதனை நீக்கிவிட்டார்.
அதில் கடந்த 10 ஆண்டுகளாக ஓர் ஆசிரியர் அங்கிருக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும்,
அதில் 18 வயது நிரம்பாத சிறுமிகளும் அடக்கம் என்று கூறப்பட்டிருந்தது.
இது போல் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், கலாஷேத்ரா நிர்வாகிகள் அவசர அவசரமாக விசாரணையினை மேற்கொண்டு, அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டினை ஏற்க மறுத்தனர்.
மாணவிகள் அதிர்ச்சி
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய நிர்வாகி
இந்நிலையில் இதுகுறித்து பல புகார்கள் ஏராளமான பெண்களிடம் இருந்து கொடுக்கப்பட்டதை அறிந்த தேசிய மகளிர்ஆணையம் இந்த புகார்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக டிஜிபி'க்கு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி சென்னை மாநகரக்காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே பாலியல்தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.
ஆனால் அந்த சம்பந்தப்பட்ட மாணவி தனக்கு அதுபோல் எவ்வித பாலியல்தொந்தரவும் ஏற்படவில்லை என்றும்,
தவறான தகவல்கள் பரவிவருவதாகவும் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மார்ச்.8பெண்கள் தினத்தன்று குற்றம்சாட்டப்பட்ட அதே ஆசிரியருக்கு கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மரியாதைசெலுத்தியதை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.