
ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி
செய்தி முன்னோட்டம்
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் கந்தர்பால் என்னும் மாவட்டத்தினை சேர்ந்த சலீமா என்னும் கல்லூரி மாணவி தனது கையால் 4 மாதங்களில் புனித திரு குர்ஆனை கம்ப்யூட்டரில் எழுதுவதுபோல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சலீமா கூறுகையில், திருக்குர்ஆன் எழுதும்போது எனக்கு தேவைப்பட்ட அனைத்தையும் எனது குடும்பத்தில் உள்ளோர் வாங்கி கொடுத்தனர்.
முதலில் இப்பகுதி மெளலவி சாஹிப்களிடம் குர்ஆனை படிக்க கற்றுக்கொண்டேன்.
அதுகுறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டேன்.
பின்னர் அதனை மன்னம் செய்ய ஆரம்பித்தேன்.
அதன் பின்னரே அதனை எழுத ஆரம்பித்தேன், வெற்றிகரமாக நான்கு மாதக்காலத்தில் குர்ஆனை எழுதி முடித்தது சந்தோஷத்தினை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பட்டமேற்படிப்பு பயின்றுவரும் இவர் தினமும் காலையிலும், மாலையிலும் கல்லூரி பாடங்களை படித்துமுடித்த பின்னரே குர்ஆனை எழுத துவங்குவாராம்.
ட்விட்டர் அஞ்சல்
புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதிமுடித்த கல்லூரி மாணவி
4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!
— News7 Tamil (@news7tamil) March 24, 2023
விவரம்: https://t.co/2ARwSH8afa#HolyQuran | #Salima | #Kashmir | #Ganderbal | #handwriting | #News7Tamil | #News7TamilUpdates