
ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை காண அற்புதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, ஜியோ, கிரிக்கெட் ரசிகர்களுக்காக மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஜியோ கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 150 ஜிபி டேட்டா வரை சலுகைகளை வழங்குகிறது.
அவை, மூன்று கட்டண திட்டங்களாக, ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.999 விலையில், முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
அனைத்து வகையான ரீசார்ஜ் திட்டங்களும், True-5G டேட்டாவுடன், 4k அம்சத்தில், அதிவேகமாக செயல்பட அனுமதிக்கிறது. இச்சலுகையானது மார்ச் 24-ஆம் முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஜியோவின் மூன்று ஐபில் திட்டங்கள் அறிமுகமாகிறது
Jio launches 3 new prepaid recharge plans with up to 40GB free data offer: All details https://t.co/wwxaC5NRrj
— IndiaTodayTech (@IndiaTodayTech) March 23, 2023