Page Loader
குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன?
ஜியோவின் அசத்தலான போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்

குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 15, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குடும்பங்களுக்காவே புதிதாக ஒரு ரீச்சார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. புதியதாக 399 ரூபாயில் தொடங்கும் Jio Plus திட்டம் தான் அது. இத்திட்டத்தில் நமக்கு அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் jio Welcome Offer கிடைக்கும். இந்த திட்டத்தில் மொத்தமாக 299, 399, 599, 699 என நான்கு விதமான பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வரும் மார்ச் 22, 2023 முதல் கிடைக்கும். 399 திட்டத்தில் மொத்தமாக 4 பேர் Jio Plus சேவைகளை பயன்படுத்தமுடியும். இதில் நமக்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் SMS வசதி கிடைக்கிறது. இதற்கு, 500 ரூபாய் வைப்பு தொகை செலுத்தவேண்டும். இதில் மொத்தமாக நாம் 75GB டேட்டா பயன்படுத்தலாம்.

ஜியோ ரீச்சார்ஜ் திட்டங்கள்

ஜியோவின் குடும்ப ப்ளான் போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகம்

அடுத்ததாக 699 திட்டத்தின்படி அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் SMS வசதிகள் தவிர்த்து, நமக்கு மொத்தமாக 100GB டேட்டா கிடைக்கும். மேலும் கூடுதலாக Netflix மற்றும் Amazon Prime சேவைகளையும் ஜியோ வழங்குகிறது. இதற்கு நாம் வைப்பு தொகையாக 875 ரூபாய் செலுத்தவேண்டும். தொடர்ந்து, 299 இத்திட்டதின்படி, இவை Family திட்டம் கிடையாது. இங்கு நமக்கு 30GB டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் அன்லிமிடெட் SMS வசதி உள்ளது. இதற்கு வைப்பு தொகையாக 375 ரூபாய் செலுத்தவேண்டும். கடைசியாக, 599 இந்த திட்டத்தை ஒரே ஒரு பயனர் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதில் நமக்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ், SMS வசதிகள் கிடைக்கின்றன. இதற்கு வைப்பு தொகையாக 750 ரூபாய் செலுத்தவேண்டும்.