ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் - இலவச சலுகைகள் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜியோவின் போஸ்ட்பெய்டு இணைப்பு மூலம், உங்கள் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது பல சலுகைகளை தருகிறது. குறிப்பாக ஓடிடி(OTT) செயலிகளுக்கு எந்த ரீசார்ஜும் தேவையில்லை. அமேசான் பிரைம், டிஷ்னி ஹாட்ஸ்டார் விஐபி, ஜியோ பிரைம், நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.1499 திட்டம் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதம் 300 ஜிபி டேட்டா இலவசம். அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.10 கட்டணம், 500 ஜிபிவரை டே்டா ரோல் ஓவர், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்.
ஜியோவின் அசத்தலான போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இங்கே
இதைத்தவிர சர்வதேச அழைப்புகளுக்கு சலுகைகள், இந்தியாவில் தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச கால்கள் வழங்கப்படும். ரூ.999 திட்டம் இந்த திட்டத்தில் மாதம் 200ஜிபி இலவசம். கூடுதலாக 1 ஜிபி ரீசார்ஜுக்கு ரூ.10. பேமலி பிளானுக்காக 3 சிம் கார்டு, தினசரி இலவச கால், 100 எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம் கொடுக்கப்படுகிறது. ரூ.599 திட்டம் இந்த திட்டத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா இலவசம், இது தீர்ந்தவுடன் ஒரு ஜிபி ரூ.10க்கு 200 ஜிபிவரை ரீசார்ஜ் செய்யலாம். வாய்ஸ்கால் இலவசம், தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசம், கூடுதலாக பேமலி பிளானுக்காக ஜியோ சிம் வழங்கப்படும். அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்.
இந்த காலவரிசையைப் பகிரவும்