LOADING...
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : இந்திய இரட்டையர் சாத்விக்-சிராஜ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இந்திய இரட்டையர் சாத்விக்-சிராஜ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : இந்திய இரட்டையர் சாத்விக்-சிராஜ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 25, 2023
12:42 pm

செய்தி முன்னோட்டம்

சுவிஸ் ஓபன் சூப்பர் சீரிஸ் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி,டேனிஷ் ஜோடியான ஜெப்பே பே மற்றும் லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை போராடி தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இரவு, இந்திய ஜோடி 54 நிமிடங்களில் 15-21, 21-11, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து சனிக்கிழமை (மார்ச் 25) இரவு மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யியை அரையிறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளார்கள். பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் போன்றவர்கள் ஏற்கனவே தோல்வியைத் தழுவி வெளியேறிய நிலையில், சாத்விக்-சிராக் மட்டுமே இந்தியா சார்பில் களத்தில் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சாத்விக்-சிராஜ் ஜோடி காலிறுதியில் வெற்றி