ஐபிஎல் 2023 : முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. 2022 ஆம் ஆண்டில் அறிமுக அணியாக களமிறங்கி பிளேஆப் சுற்றை எட்டிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், (எல்எஸ்ஜி) இந்த முறை முதல் போட்டியில் ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எல்எஸ்ஜி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்டரான நிக்கோலஸ் பூரன் பெற 16 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸை ரூ. 75 லட்சத்திற்கு கைப்பற்றியுள்ளது. எல்எஸ்ஜி அணியை இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் வழிநடத்த உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2022 இன் எலிமினேட்டர் போட்டியில் எல்எஸ்ஜி ஆர்சிபி அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்லும் முனைப்புடன் எல்எஸ்ஜி அணி உள்ளது. ஐபிஎல் 2023க்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: கே.எல்.ராகுல், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வுட். , ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனட்கட், யாஷ் தாக்கூர், ரோமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன்-உல்-ஹக், யுத்வீர் சரக்.