Page Loader
தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ்
மகன் மனோஜ் இயக்கத்தில் தந்தை பாரதிராஜா நடிக்கும்...

தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2023
08:02 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான, நடிகர் மனோஜ் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'மனோஜ் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார் மனோஜ். கடைசியாக 'ஈஸ்வரன்' படத்தில், சிறு வயது பாரதிராஜாவாக நடித்திருந்தார். மறுபுறம் இயக்குனர் பாரதிராஜா, தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை துவங்கி விட்டார். இளம் தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருகிறார். இப்போது, இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கப்போவது 'இயக்குனர்' மனோஜ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் புதுமுகங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கப்போகிறார் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'இயக்குனர்' மனோஜ் பாரதிராஜா