Page Loader
"உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம்
விரைவில் 'இயக்குனர்' பாரதிராஜா வருகிறார்

"உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

'இயக்குனர் இமயம்' என மரியாதையோடு அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடிகர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் படங்கள் இயக்கம் போதே, நடிகர்களுக்கு, காட்சி நடித்து காட்டி, இயக்குவார் என்று பரவலான பேச்சு உண்டு. அப்படிபட்டவர், தானே படங்களில் நடித்தால், கேட்கவா வேண்டும்? நவரசங்களையும் காட்டி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். திருச்சிற்றம்பலம் படத்தில், அவரும், தனுஷும், பிரகாஷ்ராஜும், படத்தை தாங்கி பிடித்தனர் என்றே கூறலாம். தற்போது, நீண்ட இடைவேளைக்கு பிறகு, 'தாய்மெய்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களை மையமாக கொண்ட இந்த படத்துக்கான ஷூட்டிங், தேனியில் நடைபெறும் என்றும், இதற்கான முதற்கட்ட வேளைகளில் பாரதிராஜா பிஸியாக இருக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

மீண்டும் 'இயக்குனர்' பாரதிராஜா