Page Loader
"உண்மையிலேயே ஒரு லெஜண்ட்": பாரதிராஜாவை சந்தித்ததும் ரம்யா பாண்டியன் இட்ட ட்வீட்
பாரதிராஜாவை சந்தித்த ரம்யா பாண்டியன்

"உண்மையிலேயே ஒரு லெஜண்ட்": பாரதிராஜாவை சந்தித்ததும் ரம்யா பாண்டியன் இட்ட ட்வீட்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2023
06:07 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை ரம்யா பாண்டியன், 'இயக்குனர் இமயம்', பாரதிராஜாவை சந்தித்துள்ளார். தற்செயலாக நடந்தது போல இருக்கும் அந்த சந்திப்பு பற்றி அவர் ஒரு நெகிழ்ச்சி பதிவை இட்டுள்ளார். கூடவே பாரதிராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார். 'ஜோக்கர்' மற்றும் 'ஆண் தேவதை' போன்ற படங்களில் நடித்ததன் மூலமும், மொட்டை மாடி போட்டோஷூட் மூலமும் தமிழக மக்களுக்கு பரிச்சயமான நடிகை ரம்யா பாண்டியன். இவர், 'குக்கு வித் கோமாளி' மற்றும் 'பிக் பாஸ் தமிழ்' போன்ற நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். கடைசியாக, மலையாளத்தில், நடிகர் மம்மூட்டியுடன் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில், இயக்குனர் பாரதிராஜாவுடன் பயணம் செய்யநேர்ந்துள்ளது. அவரை கண்ட இன்பஅதிர்ச்சியை ட்விட்டரில், ஒரு அழகிய பதிவாக பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ரம்யா பாண்டியன் பதிவு