Page Loader
தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!
சென்னையில் இரண்டாவது தொழிற்சாலையை தொடங்கும் ஆப்பிள் நிறுவனம்

தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Mar 25, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஐபோன் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே, 6 மாதங்களுக்கு முன்பாக 1,110 கோடி முதலீட்டில் சென்னையில் முதல் தொழிற்சாலையை தொடங்கி இருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க மேலும், Pegatron-யை வைத்து இரண்டாவது தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Pegatron-னின் இந்த தொழிற்சாலையானது, ஐபோனின் உதிரிபாகங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, தொழிற்சாலை அமைக்கப்படுவது குறித்தும், நிலத்தை குத்தகைக்கு எடுப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் அமைக்க பெகாட்ரான் திட்டமிட்டுள்ளது. இதனால் பெகாட்ரான் இந்தியாவில் சுமார் 10 சதவீதத்தை உற்பத்தி செய்ய உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பெகாட்ரான் நிறுவனம் இரண்டாவது தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குகிறது